பின் செல்ல

முதல் மழை பெய்தபோது பூமியில் மரங்கள் இல்லை

முதல் மழை பெய்தபோது பூமியில் மரங்கள் இல்லை
₹80
நூல் சாரம்

இப் புவியில் முதல் மழை பெய்த போது மரங்கள் இல்லை. நூலின் தலைப்பே ஓர் ஆவலை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இவ் உலகில் நாம் நம் புலன் அறிவினால் எவற்றை எல்லாம் அறிந்து கொள்கிறோமோ அவை மட்டுமே உள்ளன என்று எண்ணுவது மாயை. நாம் காணாதது, கேட்காதது, சுவைக்காதது, நுகராதது, உற்றறியாதது தான் இப் பேரண்டத்தில் அதிகம். பொதுச் சமூகத்தின் அறிவியலாளர்களின் அறிவியல் தர்க்கங்களுக்கு நம் மெய்யியலாளர்களின் தமிழ்க் கழக பாடல்களின் வழியே விடைகளை எடுத்து இயம்புகிறது இந்நூல். உள்ளுணர்வே நம்மை வழி நடத்துகிறது அவ் வழிநடத்தலின் படி வாழ்வதே சிந்தனை வழி வாழ்க்கை என்று பல சான்றுகளை முன்வைக்கிறது இந்த நூல். ஆறாம் அறிவு பகுத்தறிவு என்ற பொய்மையை உடைத்து ஆறாம் அறிவு மனம் என்ற தொல்காப்பியரின் கூற்றினை பறைசாற்ற பல்வேறு எளிமையான எடுத்துக்காட்டுகளுடன் குழந்தைகளுக்கும் புரியும் வண்ணம் எழுதப்பட்டுள்ளது இந்நூல். அடிப்படையில் அறிவிற்கும் மனதிற்குமான வேறுபாட்டினை புரிந்து கொள்ள வழி செய்கிறது இந்த ‘முதல் மழை பெய்த போது பூமியில் மரங்கள் இல்லை’ எனும் நூல்.

செம்மை நூல்களை +91 9884001889 என்ற WhatsApp எண்ணில் பெறலாம்.
செம்மை நிகழ்வுகளிலும் கிடைக்கும்.
Scroll to Top