பின் செல்ல

விட்டுவிடுங்கள்: (அவர்கள் நன்றாக இருப்பார்கள்)

விட்டுவிடுங்கள்: (அவர்கள் நன்றாக இருப்பார்கள்)
₹60
நூல் சாரம்

விட்டுவிடுங்கள் அவர்கள் நன்றாக இருப்பார்கள், குழந்தைகளை அவர்களது போக்கில் வளர நாம் துணை மட்டுமே செய்ய வேண்டும் என்று நூலின் தலைப்பே புரிய வைத்து விடுகிறது. இறைவனின் மடியில் இருந்து புதிதாக வந்த குழந்தைச் செல்வங்கள் இயல்பாகவே நன்றாகத்தான் இருப்பார்கள். அறிவினைத் திணித்து, கருவிகளை அறிமுகப்படுத்தி, இயந்திர உலகில் இருத்தி, அகந்தையை வளர்த்து, அவர்களது இயல்பினைச் சிதைத்து விட்டு, குழந்தையை வளர்க்கிறேன் என்று கூறும் பெற்றோருக்கு குழந்தை வளர்ப்பு குறித்த உண்மைகளை விவரிக்கிறது இந்நூல். குழந்தைகளின் தனித் தன்மைகள் வெளிக்கொணர துணை நிற்க வேண்டும், அவர்களது விடுதலையை அவர்களே உணர வழி காட்ட வேண்டும், பாடப் புத்தகம் கடந்த நடைமுறை வாழ்வியலை சூழலியல் கல்வியை வழங்க வேண்டும், இயற்கையோடு இயைந்த வாழ்க்கை முறையை பெற்றோர் வாழ்ந்து காட்ட வேண்டும், பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதலை நடைமுறைப்படுத்த வேண்டும். அவ் வகையில் குழந்தைகளை குழந்தைகளாக பார்க்க பெற்றோருக்கு கண்டிப்புடன் கூடிய விழிப்புணர்வு வழங்கும் நூல் “விட்டுவிடுங்கள் அவர்கள் நன்றாக இருப்பார்கள்”.

செம்மை நூல்களை +91 9884001889 என்ற WhatsApp எண்ணில் பெறலாம்.
செம்மை நிகழ்வுகளிலும் கிடைக்கும்.
Scroll to Top