பின் செல்ல

கோல நூல்

கோல நூல்
₹250
நூல் சாரம்

கோல நூலிற்கு முந்து நூல்களாக இயற்றப்பட்டவை செந்நூல், எண் நூல், உரு நூல் மற்றும் வளைநூல் ஆகியன. அந்த வரிசையில் ஐந்தாவது நூல் கோல நூல். சேர்வனவற்றின் சேர்க்கை கழிவனவற்றின் கழிவு ஆகிய இரண்டும் கூடல் கொண்டும் ஒன்றும் ஒன்று பரவிக் கலந்தும் மாற்றம் அடையும் ஒழுங்கு எனும் உறுதியான கருத்திற்கு உடன்பட்டு உடைய தெளிவான வெளிப்பாடுதான் வடிவு எனும் ஆக்கம் என்று வடிவ வெளிப்பாட்டிற்கான இலக்கணத்தை விளக்குகிறது. செவ்வளை எனும் உருவே மாந்தர் உடலாகிய ஆக்கையாக அம்மையும் அப்பனும் அருளிய செம்மையான உரு ஆகும். அஃதனுள் மூல வடிவமும் ஈற்றாகிய கோலா வடிவமும் ஒன்றை ஒன்று பின்னிக் கொண்டும் ஒன்றை ஒன்று முரள் எனும் முரண் ஒத்திசைவாகவும் இருக்கின்றன. இவற்றுக்குள் மூன்று காலமும் அடங்கியுள்ளது. மனித வடிவின் சிறப்பு இது. இறைவனது திருவுருவம் கோலம் எனும் உருநிலைதான் எனும் குற்றத்தினை தானே பெற்றுக்கொண்டு மாந்தராகிய உடலின் வடிவமைவில் அவனே அமர்கிறான். மாந்தரின் பிறழ்ச்சி உழற்ச்சி ஆகியவற்றை இறைவனும் ஏற்றுக் கொள்கிறான். மூலம் மறைவானது அது தன் கோலத்தினைக் காட்டாது என்பது அண்டக் கொள்கை. அக் கொள்கையில் தணிந்து ஆலகாலம் உண்டவன் எனப்படும் ஆலனே அருவம் ஆகாமல் உரு ஆன தன்மையை வியப்புடன் பதிவு செய்துள்ளது கோல நூல்.

செம்மை நூல்களை +91 9884001889 என்ற WhatsApp எண்ணில் பெறலாம்.
செம்மை நிகழ்வுகளிலும் கிடைக்கும்.
Scroll to Top