பாடக் குறிப்பு
செம்மை இசைத் துறை நேரடி மற்றும் இணைய வழியில் பல்வேறு வகுப்புகளைத் தொடர்ச்சியாக நடத்துகிறது. தமிழ்ப் பண்ணிசை பழகிசை இலக்கணங்கள் கருவியிசை இதக் கருவிகள் சுரம் சுதி பண்ணரி அமைவு கந்தமைவு குறித்த கல்வி மாணாக்கருக்கு கற்றுத் தரப் படுகிறது.
தேவாரம் திருவாசகம் அற்புதத் திருவந்தாதி போன்ற திருமுறைகள் மற்றும் அக நானூறு புற நானூறு குறுந்தொகை கலித்தொகை உள்ளிட்ட தமிழ்க் கழகப் பாடல்கள் போன்றவற்றிற்கு தமிழ்ப் பண் முறைப்படி ஆசானால் இசையமைக்கப்பட்டு மாணாக்கருக்கு கற்றுத் தரப் படுகிறது. பண்ணிசை குறித்த இலக்கணங்கள் அடங்கிய இசை நூல் ஆசான் அவர்களால் இயற்றப்பட்டுள்ளது.
