பாடக் குறிப்பு
ஆழத் தமிழ் வகுப்பில் ஆசான் அவர்கள் தமிழ்க் கழகப் பாடல்களுக்கு விளக்க உரை வழங்குகிறார். அகநானூறு புறநானூறு மற்றும் குறுந்தொகை பாடல்களுக்கு பொருள் விளக்கப்படுகின்றன. அதியமான் குறித்து ஓளவையார் எழுதிய பாடல்கள் வேள்பாரி குறித்து கபிலர் எழுதிய பாடல்கள் ஆகியன சொல் பொருளுடன் ஆழமாக விளக்கப்படுகின்றன. இப் பாடல்களுக்கு ஆசான் அவர்கள் தமிழ்ப் பண் அரி வகுத்து கந்தமையுடன் இசையமைத்து பாடலாக பாடவும் மாணாக்கருக்கு கற்றுத் தரப் படுகிறது. இவ் வகுப்பின் ஒரு பகுதியாக நன்கு கற்றுத் தேர்ந்த மாணாக்கருக்கு சனிக்கிழமைகளில் தனியே சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு கழகப் பாடல்கள் பொருளுரை விளக்கக் கலந்துரையாடல் நடை பெறுகிறது.
