பாடக் குறிப்பு
முப்பொருள் பாட வகுப்பில் வாத பித்த கபம் ஆகிய முப்பொருள் குறித்த அடிப்படை கொள்கைகள் உணவுக் கொள்கை செரிமான நலம் மற்றும் இக் கொள்கைகளுக்கான நடைமுறைகள் கற்பிக்கப் படுகின்றன. ஆக்கையாகிய மனித உடலைப் புரிந்து கொள்ளவும் உடலில் நோய் ஏற்படுவதற்கானக் காரணங்கள் அறியவும் உடல் சீராக இருப்பதற்கான வழிகள் மருத்துவ வழிகாட்டல்கள் மற்றும் எளிமையான வீட்டு முறை மருந்துகள் செய்முறை போன்றவை மாணாக்கருக்கு கற்றுத் தரப் படுகின்றன.
முப்பொருள், முப்பொருள் நுட்பம், வாதச் சீர்மை, மருந்து நூல், உணவு நூல், உணவு இயல்பு, ஆக்கை உணவு ஆகியன முப்பொருள் குறித்து ஆசான் இயற்றியுள்ள நூல்கள்.
