ஆசான் ம.செந்தமிழன் Aasaan M. Senthamizhan
அறிமுகம்
அம்மையப்பர் குழந்தையாகிய
ம.செந்தமிழன்
ஓர் ஆசான் எனும் முறையில் ஆற்றும் பணிகள்
அம்மையப்பர் உணர்த்தும் நெறியே தமிழர் இறையியல் என்பது ஆசான் ம.செந்தமிழன் கொள்கை.
ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கும் தன்னைப் பின்பற்றுவோருக்கும் இறையியல் மற்றும் மெய்யியல் வழிகாட்டி இவர்.
ஆசான் என்கிற சொல் குரு என்ற பொருளில் வழங்கப்படுகிறது.
ஆசான் அவரது மாணவர்களுக்கு இறையியல் மற்றும் மரபு வழிப் பட்ட மெய்யியலைக் கற்றுத் தருகிறார்.
இறையியல் என்பது சிந்தனை வழியாக நம்மைப் படைத்தவரின் ‘மூலம்’ எது என்பதை அறிந்து கொள்ளுதலும் புரிந்து கொள்ளுதலும் நிறைவாக உணர்ந்து கொள்வதும் ஆகும். மெய்யியல் என்பது பல ஆயிரம் ஆண்டுகாலத் தமிழ் மரபில் உருவான சிந்தனை.
அம்மையப்பர் உணர்த்தும் கொள்கைகளைப் பின்பற்றலே வாழ்வின் நோக்கம் என்பது செந்தமிழன் பின்பற்றும் கொள்கை.
ம. செந்தமிழன் செம்மை வனம் மற்றும் செம்மை ஆசான் பள்ளி ஆகியவற்றின் நிறுவனர். செம்மை ஆசான் பள்ளி என்பது அவரால் வழிநடத்தப் படும் ஒரு சிந்தனைப் பள்ளி. செம்மை வனம் என்பது வளமிக்க மரங்கள் நிறைந்த ஆநிரைகளைக் கொண்ட ஓர் இயற்கை வேளாண் தோட்டம்.
அவர் தனது மாணவர்கள் மற்றும் குழந்தைகளுடன் எளிமையான வாழ்க்கை முறையைக் கடை பிடித்து வருகிறார். தஞ்சாவூருக்கு அருகிலுள்ள அவரது சொந்த ஊரான ஆச்சாம்பட்டி கிராமத்தில் இந்த இடம் அமைந்துள்ளது.
குருகுலம் போன்று செயல்படும் செம்மை வனம்
மரபு இசை
தமிழ் இலக்கணம்
மரபு வேளாண்மை
இறையியல்
மரபுக் கட்டிடக் கலை
முப்பொருள் ஆகிய வாதம் பித்தம் கபம்
மரபு வாழ்வியல் கொள்கைகள்
மெய்யியல்
ஆகியவற்றைக் கற்றுக் கொடுக்கும் களமாக உள்ளது.
ஆசானும் அவரது வழிநடப்போரும் செம்மை வனத்தில் முழுமையான பண்டைய கட்டிடக் கலைக் கோட்பாடுகளின் அடிப்படையில் அம்மையப்பர் கோயில் ஒன்றினைக் கட்டுகிறார்கள்.
இக் கலைக்கு செங்கலை வடிவியல் என்று அவர் பெயரிட்டுள்ளார். இதன் இலக்கணங்கள் மற்றும் சூத்திரங்களை விவரிக்கும் வகையில் ஐந்து நூல்களையும் அவர் எழுதியுள்ளார்.
செம்மை என்பது அவரது அமைப்பின் பெயர். இதன் கீழ் அவர் வழிநடப்போர் கற்றல் மற்றும் பொதுத் தொண்டும் செய்து வருகின்றனர். மேற் குறிப்பிட்ட அனைத்துத் துறைகளுக்கும் உரிய நூல்களை அவர் இயற்றியுள்ளார். இறை இசைத் தாய் காரைக்கால் அம்மையின் அற்புதத் திருவந்தாதியின் 101 பாக்களையும் பண்ணிசையாகப் பாடியுள்ளார். அதனைத் தன் இசை மாணாக்கர்க்குக் கற்பித்து பொது நிகழ்வுகளில் இசைத்து வருகிறார்.திருவாசகம் தேவாரம் மற்றும் குறுந்தொகை புறநானூறு கலித்தொகை ஆகிய தமிழ்க் கழகப் பாடல்களுக்கும் இசை அமைத்துப் பாடி வருகிறார்.
செம்மை இசைத் துறையில் ஏறத்தாழ 300 மாணாக்கர் இணைய வழி மற்றும் வருகைக் கல்வியில் பயில்கின்றனர்.
செங்கலை வடிவியல் முப்பொருள் செம்மை அறம் ஆகிய கொள்கைகளும் இவ்வாறு கற்பிக்கப் படுகின்றன.
அவரது மாணாக்கருக்கென ஆசான் மாணாக்கர் கூட்டமைவு என ஓர் அமைவினை ஏற்படுத்தி உள்ளார்.
இதன் வழியாக மாணாக்கரும் அவரும் ஆசிரியரும் கொள்கை வழிப் பட்டு உறவாடுதல் கருத்துப் பகிர்தல் நிகழ்கின்றன.
சிறார் மற்றும் இளையோர்க்கு உரிய மரபுக் கல்வியினை செம்மை வனத்தில் கற்பிக்கிறார்.
இப் பணிகளில் அவரது மாணாக்கர் பலர் இணைந்து ஈடுபடுகின்றனர்.
இவை தவிர செம்மையின் வழியாக ஆசான் ம.செந்தமிழன் முன்னெடுத்துள்ள பணிகளின் பட்டியல் நெடியது.
அதனைக் காண விரும்புவோர் இவ் இணைப்பினைச் சொடுக்குவீர்.
Introduction
The nothingness is the source of everything.
we see the seeable. we hear the hearable.
the source is not an object to fall in the boundaries of sensory organs. The source of everything is nothing.
As all are manifested out of nothingness, seeing and hearing things are the way to knowing them, not define them.
all measures towards confining the objects within definite ideas and rationale are done by definite rationalities.
the irony is even a dust particle is not definite and it is volatile in rationality.
you cannot measure wind by your breath.
the honey is sweet to you. to the bees honey is multi-layer shelf of tastes. now tell me what is honey in its reality?
M.Senthamizhan is a Theism and Philosophical Aasaan for thousands of his followers and students. Aasaan is the term which is more relevant to Guru.
He teaches Iraiyial and Marabiyal to his students. Iraiyial denotes the concepts of the True Almighty of everything. Marabiyal is a school of thought which is derived from many thousand years of Tamil heritage.
Ammai Appan is the nomenclature of the Almighty of everything. The common world knows Ammai Appan as Lord Sivan and Mother Sakthi.
M.Senthamizhan is the founder Semmai Vanam, the Aasaan Palli which is the school of thought led by the Guru. Semmai vanam is also a natural farm consisting gardens and livestocks. He is leading the minimalistic lifestyle with his students and children. this place is situated at the village Achaampatti near Thanjavur, his home town. Being a Gurukulam semmai vanam teaches Traditional music, linguistic Grammers of Thamizh, natural farming, Iraiyial, Grammer of Architecture, Traditional constructional theories and practices, traditional medical concepts and practices, lifestyle and philosophy of Tamil heritage.
He and his followers are building a Temple at semmai vanam with complete ancient architectural concepts. He names that art Sengalai Vadiviyal. He has written four books detailing the Grammers and formulae of it.
SEMMAI is the name of his organisation under which his followers are learning and serving.
'எப்படி ' நிகழ்கிறது ? என்பது தர்க்கம். 'ஏன் நிகழ்கிறது ' என்பது மறைபொருள்.
Asking How this happens will teach you the logic. Seeking the evidential explanation of Why this happens will port you to the pathway of eternity.
'ஏன் ' என்ற கேள்விக்கான விளக்கங்கள் யாவும் உங்களை விடுதலை மிக்கவராக மாற்றிக் கொண்டே இருக்கும் .
All revelations to the quest of WHY liberate you from the known things.
எவர் ஒருவர் சுய விடுதலையை உணர்கிறாரோ அவர் பிறர் விடுதலையைப் போற்றுகிறார்.
The one who feels thy liberty respects freedom of others.
நூல்கள்
Books Published
இயற்கை வாழ்வியல் மற்றும் சமூக மேம்பாடு சார்ந்த விரிவான ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் புத்தகங்கள்.
Extensive research articles and books on natural living and social development.
உரைகள்
Speeches
மேடை உரைகள் மற்றும் இணைய வழி வகுப்புகள் மூலம் மரபுசார் அறிவைப் பகிர்தல்.
Sharing traditional knowledge through public speeches and online classes.
செயல்பாடுகள்
Recognition
ஆசான் பள்ளி செம்மை வனம்,
செம்மை வெளியீட்டகம்,
செம்மை இசை,
செம்மை நெறி,
தாய்மைக் கழகம்,
இளையோர் அறம்,
ஆசான் மாணாக்கர் கூட்டமைவு,
உழிஞைக் கூத்து,
செம்மை வேளிர் குழு,
உணாக் காப்பு,
கோயில் கட்டுமானம்,
செம்மை நிலம்.
சிந்தை சிவம்
செயலே சக்தியாம்
