ஆயம்: (சந்ததிகளுக்கான சமூகம்)
ஆயம் - ஆ என்பது உயிர்களைக் குறிக்கும் சொல். ஆயம் என்றால் உயிர்களின் கூட்டம் கூடியுள்ள இடம் என்று பொருளாகும். ஆடுகள் மாடுகள் மனிதர்கள் இன்ன பிற உயிரினங்கள் கூடியிருக்கும் இடத்தை முன்னோர் 'ஆயம்' என்றனர். ஊழிக் காலத்தின் அடையாளங்களை முன் வைக்கும் இந்நூல் காலத்தின் தேவைக்கென எழுதப்பட்டது என்ற செய்தியைக் கொண்டுள்ளது. ஊழிக் காலத்தில் அதிகாரம் மிக்கவர்கள் ஆட்டிப்படைக்கும் பொழுது நல்லிணக்கத்தோடு வாழும் சமூகங்கள் புவியெங்கும் உருவாகும், அவ்வாறான சமூகங்களில் ஒன்றை வளர்த்தெடுக்கும் விருப்பத்துடன் இந்நூல் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது. செம்மைச் சமூகச் சந்திப்பு ஒன்றின் போது எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு ஆசான் அளித்துள்ள விடைகள் மரபு தற்சார்பு வாழ்வியலுக்குத் திரும்ப விரும்புவோர் பலருக்கு ஒரு வழிக்காட்டலாக அமைந்துள்ளது. அவை இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
செம்மை நிகழ்வுகளிலும் கிடைக்கும்.
