பின் செல்ல

மரபுக் கல்வி (கொள்கை விளக்கம்)

மரபுக் கல்வி (கொள்கை விளக்கம்)
₹120
நூல் சாரம்

திறன் எனப்படுவது உள்ளிருந்து விரிவது. அது சிவமாகிய பண்பின் கூறுகளில் ஒன்று. எது நீங்கள் கட்டுக்கொள்ளாமலேயே உங்களுக்கு வருகிறதோ அதுவே உங்களுக்குரியது. கற்றுக்கொண்டுதான் செய்ய வேண்டுமென்றால் அது உங்களுக்கானது அல்ல. ஏனென்றால் கல்வி என்பது வழிக்காட்டலைத் தருமே தவிர அடிப்படையை உருவாக்கித் தராது. ஏதாவது ஒரு கல்வி யாருக்காவது அடிப்படையை உருவாக்கித் தர முனைகிறது என்றால் அது அவருடைய விடுதலையைப் பறிக்கிறது என்று பொருள். மரபுக் கல்விக்கான சாரமான கொள்கை இதுதான். கல்வி என்பது உள்ளே இருக்கும் திறனை வெளிப்படுத்துவர்க்கான வழியை காட்டுவதாக இருக்க வேண்டும். ஏன் மரபுக் கல்வி தேவை? மரபுக் கல்வி என்றால் என்ன? மரபுக் கல்வியின் கூறுகள் யாவை? ஆகிய விளக்கங்கள் ஒரு புரிதலை வழங்கி மரபுக் கல்விக்கான ஒரு பாதையைத் திறக்கிறது.

செம்மை நூல்களை +91 9884001889 என்ற WhatsApp எண்ணில் பெறலாம்.
செம்மை நிகழ்வுகளிலும் கிடைக்கும்.
Scroll to Top