‘செம்மை மரபுக் கல்வி’ என்பது முன்பே குறிப்பிடப்பட்ட ‘செம்மை வனம்’ எனும் குருகுலத்தில் தங்கிப் பயிலும் சிறுவர்களுக்கு வழங்கப்படும் ஒரு கல்வி முறையாகும். இதில் தமிழ் கணிதம், சுற்றுச்சூழல் அறிவியல் ஆங்கிலம் போன்ற பாடங்களுடன் தொல்காப்பியம் திருவாசகம் தேவாரம் போன்ற பண்டைய இலக்கியங்கள் மற்றும் கழகப் பாடல்களும் கற்பிக்கப்படுகின்றன. அத்துடன் வேளாண்மை ஆநிரை வளர்ப்பு, சமையல் தோட்டக்கலை கட்டிடக் கலை மற்றும் பல கலைகள் உள்ளிட்ட வாழ்வியல் நடைமுறைகளும் கற்றுத் தரப் படுகின்றன. இக் கல்வி முறையானது குழந்தைகளின் கற்கும் திறன் சிந்தனைத் திறன் ஆகியன மேம்படுத்தவும் அவர்களின் உள்ளார்ந்த திறமைகளை அவர்கள் தாங்களே கண்டறியவும் உதவுவதோடு அவர்களின் முழுமையான ஆளுமை வளர்ச்சிக்கும் வழி வகுக்கிறது.
செம்மை மரபுக் கல்வி
