கல்வி நலம்
பாடக் குறிப்பு
நம் பொது சமூகக் கல்வி முறையில் பற்றாக்குறை இருக்கிறது என்பதை நம்மில் பலரும் ஒப்புக் கொள்கிறோம்.
உண்மையில் கல்விக் கொள்கை என்பது எவ்வாறு இருக்க வேண்டும்? சிறார் இளையோர் எவற்றைப் பயில வேண்டும்? அவர்களது வாழ்வியலுக்கான கல்வி எது? கற்பித்தலின் இலக்கணம் யாது? குழந்தைகளின் கற்றல் திறனை எந்த அடிப்படையில் மதிப்பிட வேண்டும்? சிந்தனை மேம்பாட்டிற்கான கல்வியை எவ்வாறு நடைமுறைப் படுத்துவது? இக் கேள்விகளுக்கான விடைகளைப் பெற்று புரிதலுடன் இந்த இளம் தலைமுறையினரின் கல்விக்கான வழிகாட்டலைப் பெற ஆசானின் “கல்வி நலம்” வகுப்பில் இணையலாம்.
