ஊழி நூல்: ஆதி, அண்டம், உயிரினம், ஊழி
ஊழிக்குப் பிந்தைய சமூகத்திற்கான மறைபொருள் அடங்கிய நூல் ஊழி நூல். பல்வேறு நூல்களின் அடிப்படை சாரமாக செறிவாக ஒரு துவக்கமாக இருப்பது ஊழி நூல். பேரண்டக் கொள்கை ஐம்பூதக் கொள்கை, ஒலி ஒளிக் கொள்கை, வண்ணக் கொள்கை, புவியின் உயிரினத் தோற்றம், புவியியல், தாவரவியல், நுண்ணுயிரியல், அறிவியல், இயற்பியல் என்று பல துறைகளை உள்ளடக்கியுள்ள நூல். இறைவனின் படைப்புக் கொள்கை துவங்கி ஊழி என்றால் என்ன என்றும் ஊழி ஏன் நிகழ்கிறது ஊழியில் எவ்வாறு உயிரினக் கூட்டம் பொருந்தி வாழ இயலும் ஊழிக்குப் பிந்தைய சமூகம் எத்தகையது அச் சமூகத்திற்கான மன ஒழுங்கு, அவ் ஓழுங்கிற்கான கலை வடிவங்கள் யாவை என்று வழிகாட்டுகிறது ஊழி நூல். ஊழியின் ஒரு பகுதியான மீட்டுருவாக்கத்தில் ஐவகை ஆக்கங்களான இசை, எழுத்து, செதுக்கல், வடித்தல், கோத்தல் எவ்வாறு அச்சமூகத்தை மீட்கிறது என்று இந்நூல் விளக்குகின்றது.
செம்மை நிகழ்வுகளிலும் கிடைக்கும்.
