பிறவிப் பேறு
இந்த மனிதப் பிறவி எடுத்ததே பெரும் பேறுதான். சிவத்தை நோக்கிய உண்மையை நோக்கிய ஒரு பயணமே நம் பிறவி. அத்தகைய பயணத்தை இன்பம் நிறைந்ததாக ஆக்குவதற்கான வழிகள் இந்நூலில் மிகவும் எளிமையாக விளக்கப்பட்டிருக்கிறது. பிறவி என்பது கொடுமை, பிறப்பதே குற்றம் என்ற கருத்துகளை வலியுறுத்தும் சமயவாதிகள் இடையே பிறப்பது குற்றமல்ல பிறவியெடுத்தல் தண்டனையுமல்ல என்ற கொள்கையை இந்நூல் நிறுவுகிறது. பிறவி எடுத்தல் என்றால் என்ன? ஏன் மீண்டும் மீண்டும் பிறக்கிறோம்? உண்மையின் வழி யாது? இயல்பில் வாழ்தல் எதை நோக்கி அழைத்துச் செல்லும்? என்ற அடிப்படைக் கேள்விகளுக்கான ஆழமான பதில்கள் நூலில் நிறைந்துள்ளன. ஒரு மனிதரின் தனி வாழ்க்கை என்பது என்ன அது எப்படி இருக்க வேண்டும் என்ற இன்றியமையாக் கேள்விக்கு விடை இந்நூலில் பொதிந்துள்ளது. நோக்கம் தணியத் தணிய வாழ்க்கை நீண்டு கொண்டே இருக்கும் அந்த வாழ்க்கை இன்பமானதாக இருக்கும் என்று பிறவிப் பேறு நூல் பறைசாற்றுகிறது.
செம்மை நிகழ்வுகளிலும் கிடைக்கும்.
