ஆடியோ விளக்கம்
பொன்னார் மேனியனே
புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல்
மிளிர்கொன்றை யணிந்தவனே
மன்னே மாமணியே
மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால்
இனியாரை நினைக்கேனே.
இசையமைத்துப் பாடியவர் : ஆசான் ம.செந்தமிழன்
தாளம் & மணிக்கொத்து : மெய்யன்
தோலக் : ஆசான் ம.செந்தமிழன்
பாடல் ஒத்துழைப்பு : திரு. முரளி
பதிவிடம் : பட்டினத்தார் பயிலகம், திருவெண்காடு
புரவலர் : செம்மை திருத்தொண்டர் கி.காசிராமன்.
