‘செம்மை நீர் நிறை’ என்பது செம்மை அமைப்பின் குறிப்பிடத்தக்க முன்னெடுப்புகளில் ஒன்றாகும். ராமநாதபுரம் மாவட்டத்தில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவிலான நீர்நிலைகளைச் சீரமைத்து, அவற்றை முழுமையாக இயற்கையான முறையில் பராமரிக்கும் பணிகளைச் செம்மையினர் மேற்கொண்டு வருகின்றனர். மாநிலத்திலேயே மிகவும் வறண்ட பகுதியாகக் கருதப்பட்ட இம் மாவட்டத்தில், ‘செம்மை நீர் நிறை’ திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்ட அனைத்து நீர்நிலைகளும் தற்போது மீண்டும் நீர் நிரம்பி உயிர்ப் பெற்றுள்ளன.
செம்மை நீர் நிறை
