ஆக்கை நூல்
உடல், யாக்கை என்றெல்லாம் அறியப்படும் உயிர் இனங்களின் மூலத்தினையும் ஆதியினையும் உரைப்பதாக அமையும் நூல் ஆக்கை நூல். நுண்ணுடலிகளின் செறிவான கட்டமைப்பே ஆக்கை யாவும். அந் நுண்ணுடலிகள் காற்று முதலாக அருளப்படுகின்றன என்பதும் காற்றிலுள்ள அவற்றின் அடுத்தடுத்த படிநிலைகளின் வளர்ச்சியே தாவரம், சங்கமம் ஆகிய உயிரினப் பகுப்புகள் என்பதும் இந்நூலின் சாரமான கருத்துகள். காற்று, வெப்பம், நீர், நிலம் ஆகிய பூதங்களின் படிநிலை வளர்ச்சி எவ்வாறு உள்ளதோ, அதனை ஓத்தே நுண்ணுடலிகளின் வளர்ச்சியும் உள்ளது எனும் கொள்கையினை ஆக்கை நூல் வெளிப்படுத்துகிறது. மனிதக் கண்களால் காண இயலாத நுண்ணுயிரி வகைமைகளை, அதன் வளர்ச்சி நிலைகளை, மாற்றங்களை நேரில் கண்டது போல உணர்ந்து பதிவு செய்துள்ளார் ஆசான். "உறுபொருள் ஒன்றில் உயிர் வந்து தங்குதல் ஆக்கை எனப்படும்" என்பது ஒரு ஆழமான மெய்யியல் கொள்கை. அத்தகைய இந்நூல் ஆழந்த நுண்ணுயிரியல் பாடங்களை கொண்டுள்ளது.
செம்மை நிகழ்வுகளிலும் கிடைக்கும்.
