பின் செல்ல

திருக் குழந்தை நூல்

திருக் குழந்தை நூல்
₹750
நூல் சாரம்

திருக் குழந்தை நூல் நம் தமிழ்த் தெய்வமாகிய முருகன் பற்றி மட்டும் பேசும் நூல் அல்ல. அறக் கொள்கை, மாந்த எழுச்சிக்கான கொள்கை, ஊழ்க் கொள்கை, மானுடவியல் கொள்கை, உயிரினப் படிநிலை, காமக் கொள்கை, கற்புக் கொள்கை, மொழிக் கொள்கை, சொல் பிறப்பியல், தமிழ்க் கொள்கை, வீடு பேறு அடைவதற்கான வழி போன்ற பல்வேறு கொள்கைகளை உள்ளடக்கிய ஒரு செறிவான நூல். திருக் குழந்தை எனும் சேயோன் அடுத்த நிலையில் வேலன் பின்னர் முருகன் என மூன்று நிலைகளில் விளக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன. முதல் மாந்தப் பிறப்பு பற்றிய கருத்துகளை முன்வைக்கிறது இந்நூல். 18 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த முதல் ஆண் குழந்தை, அந்த குழந்தை கொண்டதே முதல் முகம், முதல் மிடறு, சொற்களை பெற்ற முதல் பிள்ளை, முரள் வடிவம் கொண்டு பிறந்த முதல் ஆண், முதல் புணர்ச்சி, முதல் காதல், முதல் சிந்தனை ஆகியனவற்றை பெற்ற இந்த மாந்த கொடிவழிக்கான முதல் மூத்த மாந்தக் குழந்தை சேயோன் என்றெல்லாம் இந்நூல் வழியே அறிய முடிகிறது. தமிழ்த் தெய்வம் முருகன் குறித்த பல புதிய செய்திகளை இதுவரை அறியப்படாத புதிய கோணங்களில் விளக்குகிறது திருக் குழந்தை நூல்.

செம்மை நூல்களை +91 9884001889 என்ற WhatsApp எண்ணில் பெறலாம்.
செம்மை நிகழ்வுகளிலும் கிடைக்கும்.
Scroll to Top