ஆடியோ விளக்கம்
எனக்கினிய எம்மானை
ஈசனையான் என்றும்
மனக்கினிய வைப்பாக
வைத்தேன் – எனக்கவனைக்
கொண்டேன் பிரானாகக்
கொள்வதுமே இன்புற்றேன்
உண்டே யெனக்கரிய தொன்று.
ஒன்றே நினைந்திருந்தேன்
ஒன்றே துணிந்தொழிந்தேன்
ஒன்றேஎன் உள்ளத்தின்
உள்ளடைத்தேன் – ஒன்றேகாண்
கங்கையான் திங்கட்
கதிர்முடியான் பொங்கொளிசேர்
அங்கையாற் காளாம் அது.
இசை அமைத்தவர் : ஆசான் ம.செந்தமிழன்
பாடியவர் : இலக்கியா
பாடல் குழுவினர் : சுடரி, சீர் செல்வி, அருவி, நற்றாய்
துடி நரம்பிசை (Guitar) : மெய்யன்
மிருதங்கம் : செந்தில்
புல்லாங்குழல் : முரளி
தாளம் : பிச்சையப்பன்
மணிக்கொத்து : சிவநேசன்
பதிவிடம் : பட்டினத்தார் பயிலகம், திருவெண்காடு
புரவலர் : செம்மை திருத்தொண்டர் கி.காசிராமன்.
