நின்னாவார்
பாடல்
நின்னாவார் பிறரின்றி நீயே யானாய்
நினைப்பார்கள் மனத்துக்கோர் வித்து மானாய்
மன்னானாய் மன்னவர்க்கோ ரமுத மானாய்
மறைநான்கு மானாயா றங்க மானாய்
பொன்னானாய் மணியானாய் போக மானாய்
பூமிமேற் புகழ்தக்க பொருளே உன்னை
என்னானாய் என்னானாய் என்னி னல்லால்
ஏழையேன் என்சொல்லி ஏத்து கேனே.
இசை அமைத்தவர் : ஆசான் ம.செந்தமிழன்
பாடியவர் : சீர் செல்வி
பாடல் குழுவினர் : சுடரி, இலக்கியா
தாளம் : மெய்யன்
பதிவிடம் : பட்டினத்தார் பயிலகம், திருவெண்காடு
புரவலர் : செம்மை திருத்தொண்டர் கி.காசிராமன்.
