ஆடியோ விளக்கம்
மத்த யானை ஏறி மன்னர்
சூழவரு வீர்காள்
செத்த போதில் ஆரும் இல்லை
சிந்தையுள் வைம்மின்கள்
வைத்த உள்ளம் மாற்ற வேண்டா
வம்மின் மனத்தீரே
அத்தர் கோயில் எதிர்கொள் பாடி
என்ப தடைவோமே.
தோற்றம் உண்டேல் மரணம் உண்டு
துயரம் மனைவாழ்க்கை
மாற்றம் உண்டேல் வஞ்சம் உண்டு
நெஞ்ச மனத்தீரே
நீற்றர் ஏற்றர் நீல கண்டர்
நிறைபுனல் நீள்சடைமேல்
ஏற்றர் கோயில் எதிர்கொள் பாடி
என்ப தடைவோமே.
செடிகொ ளாக்கை சென்று சென்று
தேய்ந்தொல் லைவீழாமுன்
வடிகொள் கண்ணார் வஞ்ச னையுள்
பட்டு மயங்காதே
கொடிகொள் ஏற்றர் வெள்ளை நீற்றர்
கோவண ஆடையுடை
அடிகள் கோயில் எதிர்கொள் பாடி
என்ப தடைவோமே.
இசையமைத்துப் பாடியவர் : ஆசான் ம.செந்தமிழன்
பாடல் குழுவினர் : சுடரி, இலக்கியா, சீர் செல்வி
தாளம் : மெய்யன்
பதிவிடம் : பட்டினத்தார் பயிலகம், திருவெண்காடு
புரவலர் : செம்மை திருத்தொண்டர் கி.காசிராமன்.
