ஆடியோ விளக்கம்
யானெதும் செய்வதில்லை
யாவிலும் நீ இருக்க
யாவையும் நீ இயக்க
யானெதும் செய்வதில்லை
வானெதும் பெய்வதில்லை
நீரிலும் நீ இருக்க
வேரையும் நீ இயக்க
வானெதும் பெய்வதில்லை
இருந்தும் இல்லையானேன்
பறந்தும் எல்லை காணேன்
அருந்தும் பால் நிறைவில்
உறங்கும் பிள்ளை போல்
மருந்துன் கூழ் பருகி
உறைந்து கல்லாய் ஆனேன்.
பாடல் இயற்றியவர் : ஆசான் ம.செந்தமிழன்
இசை அமைத்தவர் : ஆசான் ம.செந்தமிழன்
பாடியவர்கள் : சுடரி, இலக்கியா, மகேசுவரி, சீர் செல்வி
தாளம் : மெய்யன்
பாடல் ஒத்துழைப்பு : முரளி
பதிவிடம் : பட்டினத்தார் பயிலகம், திருவெண்காடு
புரவலர் : செம்மை திருத்தொண்டர் கி.காசிராமன்.
