‘செம்மை மரபு மருத்துவம்’ என்பது ‘செம்மை’ அமைப்பால் கற்பிக்கப்படும் ஒரு வாழ்க்கை முறையாகும். இதில் வீட்டுத் தோட்டத்திலேயே கிடைக்கும் பொருட்களைக் கொண்டு அடிப்படை உடல்நலக் குறைபாடுகளுக்குச் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சளி காய்ச்சல் தோல் பிரச்சனைகள் மற்றும் செரிமானம் தொடர்பான குறைபாடுகள் போன்றவற்றுக்கு எளிய மூலிகைகள் மற்றும் சில சமையல் பொருட்கள் ஆகியன பயன்படுத்தப் படுகின்றன. உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும் வகையிலான எளிமையான மற்றும் மனநிறைவு தரும் வாழ்க்கை முறையைக் கடைப்பிடிப்பதே செம்மை மரபு மருத்துவத்தின் அடிப்படைக் கொள்கையாகும்.
செம்மை மரபு மருத்துவம்
