ஆடியோ விளக்கம்
அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப்பருந் தன்மை வளப் பெருங் காட்சி
ஒன்றனுக்கு ஒன்று நின்றெழில் பகரின்
நூற்று ஒரு கோடியின் மேற்பட விரிந்தன
இல்நுழை கதிரின் துன்அணுப் புரையச்
சிறிய ஆகப் பெரியோன் தெரியின்
வேதியன் தொகையொடு மாலவன் மிகுதியும்
தோற்றமும் சிறப்பும் ஈற்றொடு புணரிய
மாப்பேர் ஊழியும் நீக்கமும் நிலையும்
சூக்கமொடு தூலத்துச் சூறை மாருதத்து
எறியது வளியின்
கொட்கப் பெயர்க்கும் குழகன்
இசை அமைத்தவர் : ஆசான் ம.செந்தமிழன்
தனிக் குரல் : நற்றாய்
குழுக் குரல் : அருவி
தபேலா : ஆசான் ம.செந்தமிழன்
சலங்கை : அருவி
கிங்கினி : நற்றாய்
ஒலி வடிவமைப்பு : ஆதிரை
பதிவிடம் : பட்டினத்தார் பயிலகம், திருவெண்காடு
புரவலர் : செம்மை திருத்தொண்டர் கி.காசிராமன்.
