‘செம்மை உணாக் காப்புக் குழு’ உணவுப் பாதுகாப்பு குறித்த வரவிருக்கும் நெருக்கடியைச் சமாளிப்பதற்காக ‘செம்மை உணாக் காப்புக் குழு’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. ‘செம்மை’ அமைப்பு, இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட தானியங்களை நேரடியாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்துகோரிக்கையின் அடிப்படையில் தனது உறுப்பினர்களிடையே விநியோகம் செய்கிறது. நியாயமான விலையில் தரமான பொருட்களைப் பரிமாறிக்கொள்வதன் மூலம், இவ் அமைப்பு விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் இருதரப்பினருக்கும் பொதுவான நன்மையை அளிக்கிறது. ‘உணா காப்புக் குழு கூடல்’ என்பது பொருட்களை ஓரிடத்தில் பரிமாறிக்கொள்வதற்கான ஒரு நிகழ்வாகும்; இது சேலம் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் ஒவ்வொரு மாதத்தின் முதல் வாரத்திலும் நடத்தப்படுகிறது.
செம்மை உணாக் காப்புக் குழு
