‘செம்மை மரபு கட்டுமானம்‘ தமிழ் மரபு வழி கட்டுமான முறையைப் பயன்படுத்தி வீட்டுக் கட்டுமான தேவைகளைப் பூர்த்தி செய்கிறது. மரபு வழிபட்ட கட்டிடக்கலை பாணியின் நோக்கம் என்னவெனில் பழைய கட்டுமான முறைகளை மீட்டெடுப்பது மட்டுமல்ல மாறாக, ஆற்று மணல் அள்ளுதல் இரும்புத் தாதுவிற்காக நிலத்தைத் தோண்டுதல் மற்றும் பாறைகளுக்காக மலைகளை அழித்தல் போன்ற இயற்கை வளச் சுரண்டலைத் தடுப்பதும் ஆகும். இக் கட்டுமானத்திற்குப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களான சுண்ணாம்பு கருப்பட்டி மண் மற்றும் களிமண் ஓடுகள் போன்றவை சுற்றுச்சூழலுக்கு உகந்தவை. இத்தகைய மரபுசார் வீடுகள் காற்றோட்டத்துடன் (சுவாசிக்கும் தன்மையுடன்) விளங்குவதோடு தங்களைச் சுற்றியுள்ள சூழலையும் உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன.
செம்மை மரபு கட்டுமானம்
