ஆடியோ விளக்கம்
எற்றான் மறக்கேன் எழுமைக்கும்
எம்பெரு மானையே
உற்றாய் என்றுன்னையே உள்குகின்
றேன்உணர்ந் துள்ளத்தால்
புற்றா டரவா புக்கொளி
யூரவி நாசியே
பற்றாக வாழ்வேன் பசுபதி
யேபர மேட்டியே.
வழிபோவார் தம்மோடும் வந்துடன்
கூடிய மாணிநீ
ஒழிவ தழகோ சொல்லாய்
அருளோங்கு சடையானே
பொழிலாருஞ் சோலைப் புக்கொளி
யூரிற் குளத்திடை
இழியாக் குளித்த மாணிஎன்
னைக்கிறி செய்ததே.
இசையமைத்துப் பாடியவர் : ஆசான் ம.செந்தமிழன்
மிருதங்கம் : செந்தில்
நாதஸ்வரம் : சிவநேசன்
தாளம் : நற்றாய்
மணிக்கொத்து : அருவி
பதிவிடம் : பட்டினத்தார் பயிலகம், திருவெண்காடு
புரவலர் : செம்மை திருத்தொண்டர் கி.காசிராமன்.
