ஆடியோ விளக்கம்
மந்திர மாவது நீறு
வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு
துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு
சமயத்தி லுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன்
திருஆல வாயான் திருநீறே.
வேதத்தி லுள்ளது நீறு
வெந்துயர் தீர்ப்பது நீறு
போதந் தருவது நீறு
புன்மை தவிர்ப்பது நீறு
ஓதத் தகுவது நீறு
உண்மையி லுள்ளது நீறு
சீதப் புனல்வயல் சூழ்ந்த
திருஆல வாயான் திருநீறே.
இசை அமைத்தவர் : ஆசான் ம.செந்தமிழன்
பாடியவர் : அருவி
மிருதங்கம் & பத முழவு : ஆசான் ம.செந்தமிழன்
துடி நரம்பிசை (Guitar): மெய்யன்
நாதசுவரம் : சிவநேசன்
தவில் : பிச்சையப்பன்
சலங்கை : அருவி
ஒலி வடிவமைப்பு : ஆதிரை
பதிவிடம் : பட்டினத்தார் பயிலகம், திருவெண்காடு
புரவலர் : செம்மை திருத்தொண்டர் கி.காசிராமன்.
